மாலை ஆறு ஆகியும் அந்தி சாயாத ஸ்வீடனின் வசந்தக்காலக் கதிரவனின் ஒளியில் தன் கணினி முன் தன்னுடைய முதுகலைப் படிப்பின் கடைசி அத்தியாயமான "thesis" தயாரிக்கும் பணியில் மும்முரமாய் இருந்து கொண்டிருந்தான் கார்த்திக். அந்நேரம் பார்த்து கணினியின் ஓரமாக "skype"இல் கணேஷிடம் இருந்து அழைப்புமணி அடிக்க துவங்கியது, அங்கிருந்து இந்த கதை ஆரம்பம் ஆகிறது.
யாருடா, நானே எப்போதாவது தான் படிக்க ஆரம்பிக்கிறேன், இந்த நேரத்தில தான் உங்களுக்கு என் ஞாபகம் வருமா. ஒஹ் இது என்ன புதுசா கணேஷ் கால் பண்றாரு. சரி என்னனு கேட்போம். என்ன கணேஷ் புதுசா கால் எல்லாம் பண்ணுரிங்க? எப்படி இருக்கீங்க? என்ன செய்துட்டு இருக்கீங்க?
கணேஷ் அதற்கு, நான் எப்போதும் போல தான் இருக்கேன். நீ இப்போ எங்க இருக்க?
நான் எப்பவும் போல வீட்டுல தான் இருக்கேன், ஏன் கேட்கறிங்க?
சரி அப்போ இன்னும் இரண்டு மணிநேரத்தில அங்க வர்றோம், எல்லாரும் கிளம்பி காட்டுக்குள்ள சும்மா ஒரு நடை போயிட்டு வருவோம். சரியா?
எதுக்கு இப்போ? போன வாரம் தான் எல்லாரும் இருக்கும் போது போயிட்டு வந்தோம் இல்ல...
இல்லடா நானும் மணியும் ஒரு வாரம் கழிச்சு ஊருக்கு போயிடுவேன், விவேக்கிற்கும் படிப்பு இந்த மாச கடைசில முடிஞ்சிடுசுனா ஊருக்கு கிளம்பிடுவான். அது தான் சரி இன்னைக்கு குளிரும் அதிகம் இல்ல, எல்லாரும் அப்படியே சும்மா ஒரு நடை போயிட்டு வரலாம்னு அழைக்கிறேன். என்ன சொல்ற?
சரி இப்படிதான் போன வாரம் அழைச்சிட்டு போயி காட்டுக்குள்ள தனியா அலைய விட்டுடிங்க. இந்த தடவையும் அந்த மாதிரி எதாச்சும் ஏற்பாடா?
இல்லடா போன முறை நாங்க அந்த மாதிரி செய்யல, அசோக் தான் அந்த மாதிரி உன்ன காட்டுக்குள்ள அலைய வெச்சி வேடிக்கை பார்த்தான். ஆனாலும் நாங்க உன்ன மறுபடி வந்து அழைச்சிட்டு வந்துட்டோம்ல?
நல்லா வந்திங்க, சரி நான் கிளம்பி தயாரா இருக்கேன். போன முறை மாதிரி இரண்டு மணி நேரம் கழிச்சு வராதிங்க, சரியா?
ஹும்ம் முயற்சி பண்றோம். இப்போ "WILLYS" கடைக்கு எல்லாரும் போறோம், போயிட்டு சிக்கிரம் வந்துடறோம். அப்படினு கணேஷ் பேசி முடித்தார்.
நான்கு மணி நேரம் கழித்து கார்த்திக்கின் கைபேசியில் அழைப்பு மணி ஒலித்தது...
பொதுவாக ஸ்வீடனில் அதிகபடியான அடுக்குமாடி விடுகளில் பாதுகாப்பு வசதிகள் அதிகம், அதில் ஒன்றுதான் இந்த தொலைபேசி வழி பாதுகாப்பு. யாராவது ஒருவர் இமாதிரியான ஒரு விட்டிற்குள் செல்ல எண்ணினால் அங்கு வசிப்பவர் யாரேனும் தொலைபேசிக்கு அந்த வீடிற்முன் உள்ள சாதனம் முலமாக அழைத்து அதற்கு அங்கு வசிப்பவர் தங்கள் தொலைபேசி முலம் கதவை திறந்தால் தான் அவர்கள் உள்நுழைய முடியும். அம்மாதிரியான தொலைபேசி அழைப்புகள் யார் அழைக்கிறார்கள் என்று தெரியாத எண்ணாக (private number) இருக்கும்.
யாருப்பா அந்த பக்கம் என்று கிண்டலாக எதிர் முனையில் இவர்கள் தான் என்று தெரிந்து கார்த்திக் பேச ஆரம்பித்தான்.
டேய் கதவை திறந்துவிடு நாங்க வந்து இருக்கோம் என்று கணேஷ் எதிர் முனையில் கூறினார். அதற்கு கார்த்திக் கதவை திறக்கும் பொத்தானை தன்னுடைய தொலைபேசியில் அழுத்தி அவர்களுக்கு கதவை திறந்து வைத்தான். இரண்டு நிமிடம் கழித்து, கார்த்திக் அறை கதவை திறந்துக் கொண்டு அவர்கள் அனைவரும் வந்தனர்.
கார்த்திக் அவர்களை பார்த்து, இது தான் நீங்க சொன்ன நேரம்மா? எவ்வளவு நேரம் உங்களுக்காக இப்படியே காத்துட்டு இருக்கிறது?
அதற்கு கணேஷ், இல்லடா "WILLYS" கடையில ஒரு சின்ன விஷயம், அதுதான் இவ்வளவு நேரம் ஆக காரணம். அத நம்ம போகும் போது சொல்றேன். இப்போ கிளம்பு நேரம் ஏற்கனவே ஆகிடுச்சு.
சரி, நான் ஏற்கனவே தயார் தான், உங்கள தான் எதிர் பார்த்துட்டு இருந்தேன். இப்போ வாங்க போலாம்னு கார்த்திக் அனைவரையும் அழைத்தான்.
கார்த்திக் தங்கி இருக்கும் அடுக்கு மாடி விட்டை ஒட்டி காட்டுப்பகுதி அமைந்து உள்ளதால், அவன் விட்டின் பின்புறம் அமைந்துள்ள காட்டிற்குள் செல்ல போடப்பட்டு இருக்கும் வழியாக அனைவரும் நடக்க ஆரம்பித்தனர். அப்பொழுது மணி சரியாக பத்து மணி முடிந்து அரை மணி நேரம் ஆனது.
அனைவரும் காட்டுப் பாதையில் ஒருவர் பின் மற்றோருவராக செல்லும் பொழுது, ஏன் இன்னைக்கு இப்படி இருட்டா இருக்குனு தெரில என்று விவேக் பேச்சை துவங்கினான்.
அதற்கு கார்த்திக் போனமுறை பனி படர்ந்து இருந்ததால நிலா வெளிச்சம் கொஞ்சம் பட்டாலும் நமக்கு நல்ல பாதை தெரியும், இப்போ பனியும் இல்ல அம்மாவசை காரணமா நிலவும் இல்ல. இருட்டு மட்டும் தான் எங்கும் இருக்கு, நல்ல வேலையா நான் இந்த டார்ச் விளக்கை எடுத்து வந்தேன், இல்லைனா இன்னைக்கு ஒரு வழி ஆகி இருப்போம்.
அதற்கு மணி உடனே, இப்போ இதுல்ல இருக்ற பாட்டரி முடிஞ்சுடுச்சுனா என்ன செய்வ?
இது இல்லைனா cellphone விளக்குள நடக்க வேண்டியதுதான் என்றான் கார்த்திக்.
சரி அதுவும் தீர்ந்துடுச்சுனா, என்ன செய்வனு மணி கேட்க, அதற்கு கணேஷ் இங்கவே இன்னைக்கு இரவு தங்கிட்டு நாளைக்கு காலைல போக வேண்டியதுதான் என்று கூறிவிட்டு மேலும் நடந்து சென்றனர்.
அப்பொழுது விவேக் அனைவரையும் அப்படியே அமைதியாக நிற்கும் படி செய்து கார்த்திக்கை மட்டும் தனியாக நடக்க செய்தான். அனைவர்க்கும் முன் விளக்கேந்தி சென்று கொண்டிருந்த கார்த்திக் இவர்கள் பேச்சு சத்தம் இல்லாததால் பயத்துடன் அவன் திரும்பி பார்க்க அனைவரும் சிரித்து அவனின் பயத்தை கேலி செய்தனர். கார்த்திக்கிற்கு சிறுவயது முதலே அமாநிஷியங்கள் மேல் நம்பிக்கை உள்ளதால் அவன் மிகவும் பயத்துடனே வந்து கொண்டு இருந்தான். அதனால் அந்த நடை பயணத்தின் நடுவே அவ்வபோது அவனை ஒருவர் மாற்றி ஒருவர் பயப்படும் வகையில் விளையாட்டு செய்து வந்தனர், இவ்வாறு பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் காட்டின் நடுவே உள்ள குளத்திற்கு பதினொரு மணி அளவில் அவர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர்.
அந்த குளத்தின் பெருமை என்வென்றால் அது ஸ்வீடனின் மிகப் பெரிய உயிரியல் பூங்காவின் பின்புறம் அமைந்துள்ளது ஆகும். மேலும் காட்டிற்கு நடுவில் இரண்டு கால்பந்து மைதானம் அளவு உள்ள அந்த குளம் இரவு நேரத்தில் யாரும் இல்லாமலும் அருகில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து வரும் விலங்குகளின் சத்தத்தினாலும் ஒருவித பயத்தினை இயற்கையாகவே ஏற்படுத்தும். அப்பொழுது குளத்தின் எதிர் முனையில் யாரோ சிலர் நெருப்புமுட்டி அதன் அருகே மதுவருந்தி கத்திக்கொண்டும் ஏதோ செய்துக்கொண்டும் கொண்டாடிக் கொண்டு இருந்தனர்.
அவர்கள் தங்கள் இருக்கும் இடத்திலிருந்து வெகுதுரத்தில் இருந்ததால், அவர்களை பற்றி பெரியதாக பொருட்படுத்தாமல் அவர்கள் பேச துவங்கினர்.
முதலில் கார்த்திக், அம்மாவாசை இரவிலும் நட்சதிரங்கள் எவ்வளவு அழகா இருக்கு இல்ல என்று பேச்சை தொடங்கினான், அதன் பின்னர் ஒருவர் பின் ஒருவராய் பேச்சை தொடங்கி அவர் அவர்களின் தங்கள் ஸ்வீடனின் பசுமை நினைவுகளை பகிர தொடங்கினர். இந்த பேச்சு சிறிது நேரம் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் எதிர் புறத்தில் உள்ளவர்களின் மதுமயக்க ஆட்டமும் கும்மாளமும் அதிகரித்து கொண்டிருந்தது. அந்நேரம் பார்த்து அவர்களை கைது செய்ய காவல் துறை அதிகாரிகள் இரண்டு கார்களில் அங்கு வந்து சேர்ந்தனர்.
ஸ்வீடனில் போது இடத்தில் மது அருந்துவது சட்டபடி குற்றம், ஆகையால் அங்கு என்ன நடக்க போகிறது என்று இங்கு இருந்த அனைவரும் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தனர். அப்பொழுது அங்கு வந்த காவல் துறை அதிகாரிகள் அந்த மது அருந்திக் கொண்டிருந்தவர்களிடம் விசாரித்து கொண்டு இருந்தது. அதே வேளையில் இரண்டு காவல் துறை அதிகாரிகள் இவர்கள் இருக்கும் இடம் நோக்கி விரைந்து வரத்தொடங்கினர்.
அங்கு இருந்து நகரத் தொடங்கினால் வீணாக பிரச்சனை வரும் என்று எண்ணி அவர்கள் அனைவரும் நகராமல் அங்கேயே இருந்து, அவர்கள் ஏன் இங்கு வந்தனர் என்று அந்த அதிகாரிகளிடம் கூறலாம் என்று எண்ணினர்.
அப்பொழுது அங்கு வந்து சேர்ந்த அதிகாரிகள் நேரடியாக கார்த்திக்கிடம் வந்து ஸ்வீடன் மொழியில் பேச துவங்க ஆரம்பித்தவுடன் அதற்கு கார்த்திக் எனக்கு ஆங்கிலம் மட்டும் தான் தெரியும் என்று தொடங்கி அவன் ஏன் இங்கு வந்தான் என்று கூறினான். அதையெல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்ட காவல் துறை அதிகாரிகள் அவ்வாறென்றால் உன்னோடு வந்த உன் நண்பர்கள் எங்கே என்று கேட்க. அது வரை என்ன நடக்க போகிறது என்ற பதற்றத்தில் திரும்பிப் பார்க்காமல் இருந்த கார்த்திக் திரும்பி, இவர்கள் தான் என்று காவல் துறை அதிகாரிகளிடம் காண்பிக்க முற்படும் பொழுதுதான் அங்கு அவன் மட்டும் தனியாக இருப்பது தெரிய வந்தது. மேலும் அங்கு அவர்களை தேடி அவன் இருந்த இடத்தை சுற்றிப் பார்க்கும் பொழுது அவன் அருகே "willys" கடையின் பை ஒன்று பாதி தீ பிடித்து கருகிய நிலையில் இருந்தது. அப்பொழுது மணி பன்னிரண்டை தொட்டுக்கொண்டிருந்தது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால், மறக்காமல் இன்ட்லி மற்றும் தமிழ் மனத்தில் உங்கள் வாக்கினை பதிவு செய்யுங்கள். மேலும் உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்...







